| விவசாயம் |
| எங்கே விவசாயம் ? |
| விவாசாயம் விழுந்துவிடும் அபாயம் |
| கணினி மீது இருக்கும் கவனம் |
| காணி நிலத்தின் மீதும் தினமும் வரணும் |
| வயல்வெளிகள் எல்லாமே வீடுகள் |
| கட்டிவிட்டால் |
| வாய்க்கரிசிக்காக கூட கையேந்தும் நிலைமை வரும் |
| அரிசி விலை அதிகம் என என்னும் நெஞ்சம் |
| தங்கம் விலையை அரிசிவிலை மிஞ்சும் |
| சேற்றில் கைவைக்க ஆல் இல்லை இங்கே |
| நாளை சோற்றில் கைவைக்க |
| வயல்வரப்புகள் எங்கே |
| உனக்கு இன்று உண்டு உணவு |
| நாளை உணவு வெறும் பகல் கனவு |
| கணினி கண்ட அறிவு |
| விவசாயத்தை பேணிக்காக்க அளின்றி |
| ஏற்பட்ட சரிவு |
| கணினி ஆளும் உலகம் |
| வேண்டாம் அந்த நரகம் |
| காணி நிலத்தை நாளை இந்த உலகம் தேடுமே |
| பசி என்னும் நோயால் நாளை உலகம் வாடுமே |
| உயிரின் விலையறியா மனிதா |
| உன் உயிரை விட கணினி என்ன பெரிதா |
| கால்வயிற்று கஞ்சிக்காக கையேந்தும் துயரம் |
| நாளை தலைமுறை வரை தொடரும் இந்த |
| அவலம் |
| என் தோழா |
| இன்றே கவலை கொள்ளடா |
Thursday, August 30, 2012
விவசாயம்
Sunday, August 26, 2012
| என் அன்புக்குரியவளே! |
| கடைசியாக நீ |
| சொல்லிப் புலம்பிய வார்த்தை |
| "சந்தோஷம் சாமி!" |
| இப்போது சொல்! |
| புலம்பி முடித்துவிட்டாயா |
| பெண்ணே? |
| எப்படி நினைத்தாய்? |
| நானுன்னை |
| நிரந்தரமாகப் பிரிந்துவிடுவேன் |
| என்று |
| எப்படி நினைத்தாய்? |
| பைத்தியமே! |
| நமக்கிடையில் |
| நீண்டுகிடப்பது தூரமல்ல |
| நேசத்தின் |
| நீளமல்லவா? |
| எப்படி நினைத்தாய் |
| நானுன்னை |
| நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? |
| உன்னை விட்டு |
| எத்தனை தூரம் பறந்தாலும் |
| உன் |
| நினைவுச் சிறகுகளோடுதான் |
| நான் பறந்துகொண்டிருப்பேன் என்பதை |
| நீ அறிவாயா? |
| என் |
| பாலைவெளிகளில் |
| பாலூற்றாய் வந்தவளே! |
| நீ |
| அன்போடு பேசும் |
| அந்த நிமிடங்களிலெல்லாம் |
| என் ரத்தக் குழல்களில் |
| பன்னீர் நதியின் |
| பாய்ச்சல்.... |
| என் |
| ஹார்மோன் சுரப்பிகளெல்லாம் |
| அமுதச் சுரபிகளாய் |
| ஆகியிருக்கின்றன... |
| எப்படி நினைத்தாய் |
| நானுன்னை |
| நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன் என்று? |
| நரம்புகள் அறுபட்ட யாழாய்ப் |
| பிறைநிலா கதறுவதுபோல்.... |
| இந்தப் பிள்ளை நிலாவும் |
| உன் |
| நினைவுகளில் |
| நிச்சயம் கதறிக்கொண்டுதான் இருக்கப்போகிறது! |
| என் |
| நெஞ்சை நோக்கி |
| நினைவுக் கற்களை |
| நிறுத்தாமல் வீசிக்கொண்டிருப்பவளே! |
| என் கல்நெஞ்சை |
| ஏன் கண்ணாடியாய் மாற்றினாய்? |
| உன் நினைவுக்கற்களால் |
| உடைபட்டுச் சிதறும் |
| இருதயச் சில்லுகள் ஒவ்வொன்றும் |
| என் உயிரைக் கிழிக்கின்றன... |
| நீ அறிவாயா? |
| துக்கங்களாலும் |
| தோல்விகளாலும் |
| என் |
| இருதயத்தின் அறைகள் |
| இருண்டு போகும் போதெல்லாம் |
| அங்கே |
| உன் நினைவுகளென்னும் மெழுகுவர்த்திகள்தான் |
| எரியப் போகின்றன |
| என்பதை அறிவாயா? |
| நான் |
| பாறையாய் இருந்தபோதெல்லாம் |
| பூவைப் போல் வருடிக்கொடுத்தாய்! |
| இப்போது |
| பூவாக மாறியிருக்கிறேன். |
| ஏன் |
| சொற்கள் என்னும் |
| சம்மட்டியால் அடிக்கிறாய்? |
| என் |
| மனமென்னும் |
| மரத்தடி நிழலில் |
| இதுவரை எத்தனையோ பேர் |
| இளைப்பாறிவிட்டுப் போனதுண்டு. |
| அப்போதெல்லாம் |
| ஆனந்தமாய்க் கிளைத்தேன்! |
| ஆனால் |
| நீ வந்த பிறகுதானடி |
| எங்கே வெளியேறிவிடுவாயோ |
| என்ற வேதனையிலேயே |
| பட்டுப் போகிறேன்! |
| நம் பிரிவு |
| நிரந்தரமானதென்று |
| நீயே முடிவுசெய்துவிட்டாயா? |
| எப்படிச் சொன்னாய்? |
| "இந்தப் பிரிவு |
| நிரந்தரமானது போலத் தோன்றுகிறது!" |
| அடி பேதைப் பெண்ணே! |
| முத்து போனபிறகு |
| சமுத்திரத்திற்கு ஏதம்மா |
| சரித்திரம்? |
| "மறக்க மாட்ட இல்ல?" |
| என் |
| அன்பின் மீது |
| அவ்வளவு சந்தேகமா? |
| இன்னும் நீ |
| நான் |
| "நிரந்தரமாய்ப் பிரிந்துவிடுவேன்" என்று |
| நினைத்தால் |
| ஒரு வழி இருக்கிறது. |
| என் முகவரியை |
| அனுப்பி வைக்கிறேன்! |
| வந்து |
| உன் கூந்தல் பூவை |
| என் கல்லறையில் வைத்துவிட்டுப் போய்விடு..... |
Tuesday, August 21, 2012
| எத்தனை கடவுளிடம் |
| எனக்காக வேண்டியிருப்பாய்! |
| எத்தனை மணித்துளிகள் |
| எனக்காக காத்திருந்தாய்! |
| எத்தனை இரவுகள் |
| என் வரவுக்காக விழித்திருந்தாய்! |
| எத்தனை ஆண்டுகள் |
| இரவில் விழிக்காமல் நானிருக்க |
| விழித்து கொண்டு நீ இருந்தாய்! |
| கருவறையில் இருக்கும் |
| கல்லைவிட,கள்ளகபடமில்லாத, |
| கருவறையில் சுமந்தவளே, |
| கடவுள் என்பதை நீ உணர்த்தினாய்! |
| என் வலிக்காக நான் அழுதேன். |
| வளர்த்தவளுக்காக நான் அழுததில்லை... |
| காரணம் தெரியாமல் என்னோடு நீ அழுதாய்! |
| இதயத்தை உதைத்தவளுக்காக |
| வலியால் நான் அழுதேன்... |
| காரணம் ஏதும் கேட்காமல் அப்போதும் |
| என்னுடன் நீ அழுதாய்! |
| அன்பு ஒன்றே உலகில் |
| சிறந்தது என்பதை தெரியவைத்தாய்! |
| அன்புதான் அழுகையாக |
| வெளிப்படுகின்றது என்பதை புரியவைத்தாய்! |
| அன்பே அன்னை!அன்புதான் உலகம் |
| என்பதை உணர்த்தினாய்! |
| கருவறையில் இருந்தபோது |
| கரு என்று பாராமல், |
| உன் உயிரை பற்றி நினைக்காமல் |
| கருவிற்கு ஓர் உயிர் கொடுத்தாய்! |
| மழலையாக தவழ்ந்தபோது |
| இரத்தம் என பாராமல், |
| என் கண்ணீரை துடைக்க |
| இரத்தத்தை பாலாக மாற்றி, |
| எனை மகிழச்செயதாய்! |
| மனிதனாக வளர்ந்தபோது |
| சோகம் தெரியாமல் நான் வாழ, |
| சுகமாக நான் இருக்க, |
| நலமுடன் நான் வாழ, |
| எனக்காக என்று நான் இருந்தபோது |
| தனக்காக என்று நீ இல்லாமல், |
| இரத்தத்தை உருக்கி |
| வியர்வை சிந்தினாய்! |
| அன்றும் எனக்காக |
| கண்ணீர் வடித்தாய்! |
| இன்றும் எனக்காக |
| கண்ணீர் வடிக்கின்றாய்! |
| இதுவரை செய்த தவறுகளுக்காக |
| தலை வணங்குகின்றேன்! |
| வாழ்க்கையை தொலைக்க |
| நான் விரும்பவில்லை... |
| இதோ!கடவுளாக |
| உனை வணங்குகின்றேன்! |
| கடல் தாண்டி |
| பயணம் செய்ய விருப்பமில்லை. |
| நீயே!எந்தன் |
| அசையா சொத்தாக இருக்கும்போது! |
| காற்றை |
| சுவாசிக்க விருப்பமில்லை... |
| நீயே!எந்தன் |
| மூச்சாக இருக்கும்போது! |
| ஒலியினை கூட |
| கேட்க விருப்பமில்லை.... |
| நீயே!எந்தன் |
| செவியாக இருக்கும்போது! |
| அத்தனையும், |
| இத்தனையும், |
| இத்தனை நாட்கள் |
| நான் இழந்ததுபோதும்... |
| இனி,அன்பை மட்டும் என்றும் |
| நான் இழக்க விரும்பவில்லை... |
| தாயே!உனையே! |
| என் இதயத்தில் நேசிக்கிறேன்! |
| உன்னை மட்டுமே |
| உயிரின் மூச்சாக சுவாசிக்கிறேன்! |
| இனி,எனக்கு |
| ஒரு பிறப்பு என்றால், |
| அது உன் கருவறையாக |
| மட்டும்தான் இருக்க வேண்டும். |
| எனக்கு இறப்பு என்றால், |
| அதுவும் உன் மடியாக |
| மட்டுதான் இருக்க வேண்டும்.... |
| இனி,உனக்கு |
| ஒரு பிறப்பு என்றால், |
| எனக்கு மகளாக |
| மட்டும்தான் நீ பிறக்க வேண்டும்... |
| மகளாக பிறந்து, |
| தாயாக இருந்து, |
| எனை நீ |
| வளர்க்க வேண்டும்..... |
| கடவுள் |
| என்பவன் |
| ஒருவன் இருந்தால், |
| இதனையேற்று |
| எனக்காக |
| செவி சாய்க்க வேண்டும்.... |
| அன்பே கடவுள்! |
| அன்பை தரும் |
| அன்னை மட்டுமே கடவுள்! |
| தாயே!நீ வாழ்க! |
| அன்பிற்கு உயிர் கொடுத்தவளே!!! |
| பல்லாயிரகணக்காண்டுகள் நீ வாழ்க! |
Wednesday, August 8, 2012
விழிகள் விண்மீன்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ - உன்
பெயரோடு விளையாடுகின்றன!
அர்த்தமானதாய்த் தெரிந்த
அந்த நேரங்கள் எல்லாம் - இன்று
அபத்தமாய்த் தெரிகின்றன!
அந்த நேரத்திற்கு அப்புறம்
அந்நியமாயிற்று அனைத்துமே..!
கல்லடிபட்டு பெயர்ந்த
கால்விரல் நகத்தின் காயத்தில்
அருகம்புல் மாட்டிக்கொண்டது போன்ற
வலியாய் உன் நினைவுகள்!
நினைவுகளில் எத்தனையோ
சூழ்ந்திருக்கும்
சுகம் துக்கம் எல்லாம்
எப்படியொன்று சொல்லிட
முடிந்திடவில்லை!
எழுத நினைத்தவையெல்லாம்
மனசில் நிறைந்துள்ளது!
எழுத எழுத
சுகமும் துக்கமும்
உன்னைச் சார்ந்தவையாகவே
சுழல்கின்றன.....
மரத்துப்போகவைக்கும் - உன்
போக்கினில்
மெல்லிய உணர்வுகளும்
மெல்லச்சாகின்றன!
மழைத்தண்ணீர் இல்லாத
கருவேலமரமாய்
இதயமும்
வறண்ட நிலையில்...!!
எத்தனை வெறுமைகள்
என்னுள் வந்து சேர்ந்தாலும் - உன்
பேறுகளைக் கேட்டு
பெருமையடைகின்றேன்...
உனக்கென்று இருக்கும்
வார்த்தைக்கலைகள்
என்னிடம் சிதைந்தபடி
சிலந்தியாய்ப் பின்னியுள்ளன!
நினைப்பதும், நடப்பதும்
வேறாக இருந்தாலும்
நினைவுகள் எல்லாம்
வேராய் நீண்டுகிடக்கின்றன!
கனவுகளை இழந்துவிட்ட
கண்களுக்கும், இதயத்திற்கும்
காலங்கள் எப்படியிருந்தால் என்ன??!!
Subscribe to:
Comments (Atom)

