Saturday, October 6, 2012


என் அன்னைக்கு அடுத்த அன்னை ! 
கெஞ்சியும் கொஞ்சியும் , 
ஆசையாய் அதட்டலாய் , 
பாலுட்டி சோறூட்டி , 
இருபதுவரை என் தாய் , 
இறுதிவரை என் தாரம்! 
என் தொப்புள் கொடி உறவுக்கு 
தோள் கொடுக்க வந்த 
தாலிக்கொடி உறவு ! 
தாய் ,தந்தை , 
அதற்கடுத்தபடியாய் மனிதரில் 
பார்க்கும் மூன்றாவது தெய்வம் , 
எனெக்கான நலம் நாடி , 
அழுகையிலும் சிரிப்பிலும் ஒன்றான 
என் இறுதி நண்பன் , 
என் நலத்தோடு சேர்த்து , 
என் குடும்பத்தாரை 
உணவிட்டு அரவணைக்கும் 
அடைகாக்கும் பறவை ! 
என் சுக துக்கங்களின் 
சுமைதாங்கி ! 
இருட்டு உலகில் 
எனக்கு வழிகாட்ட வந்த 
ஒளி விளக்கு , 
என் விந்து துளிகளை 
விதையாக்கி 
என் வம்சத்தை விருட்சமாக்கும் 
புண்ணிய பூமி, 
பிள்ளை வரத்தின் , 
படைப்பாளி ! 
என் முழுமையான 
முந்தானை உலகம் , 
இன்பத்திலான வீட்டு சிறை , 
என் சுகம் , சோகங்களின் 
பிறப்பிடம் , 
அன்பில் அம்மா , 
அறிவுரையில் அப்பா, 
வெளிப்படையான விஷயங்களில் நண்பன் ! 
என்னையும் என் உறவுகளையும் 
நேசிக்கும் ஓர் உன்னத உறவு , 
என் எதிர்கால திட்டங்களின் பயனாளி , 
நாங்கள் சம்பாதித்து சேர்திடாத 
குடும்ப பொக்கிஷம் , 
எங்கள் குடும்ப குத்துவிளக்கு , 
எங்கள் வீட்டில் கொலுசின் ஓசையில் 
நடமாடும் தெய்வம் ! 
என்னையும் தெய்வமாக்கிய ஒரே துணை , 
என்னை எழுப்பும் காலைமணி , 
விடியலில் நான் முகம் பார்க்கும் கண்ணாடி , 
என் அதிர்ஷ்டங்களின் தேவதை , 
என் அந்தரங்கத்தில் சரிபாதி ! 
என் இளமை எதிர்பார்ப்பின் பரிசு , 
என் இல்லத்தை ஆளவந்த அரசி , 
கால கட்டளைகளில் அடங்காத நான் 
அவள் காம கட்டளைகளில் அடங்கி இருக்கிறேன் ! 
உலகமே சுகமாகும், , 
மெத்தைகள் மீது வெறுப்புவரும் , 
அவள் மடிசாய்ந்து , 
தலைகோதி கன்னசரும் நேரத்தில் ! 
கடமைகளில் எனக்கு இணையானவள் , 
வெளிப் பொறுப்புகளை நான் பார்க்க , 
வீட்டு பொறுப்பு அவள் கையில் , 
என் வரவு செலவுகளில் மனம் நிறைந்த 
மனையாள் ! 
உறவுகளில் புதிரானவள் , 
உணர்வுகளில் கடவுள் ஆனவள் , 
உலகம் போற்றும் பென்மையானவள் , 
மென்மையே குணமானவள் ! 
அன்பே உருவானவள் , 
அனைத்திலும் நிறைவானவள் , 
என் கருத்தினில் கருவானவள் , 
கனவிலும் நினைவிலும் 
என் கடவுளானவள்!
என் மனைவி நிமிஷா ரமேஷ் !!!!