| மடியில்
சுமந்து பாலூட்டியவளை |
| "மம்மி"
என்றழைக்கும்போதும், |
| தமிழ்நாட்டுத்
தகப்பனை |
| "டாடி"
என்றழைக்கும்போதும், |
| செவிபொத்தி
அழுகின்றாள் |
| சினம்
கொண்ட செந்தமிழ்த்தாய்! |
|
| நாகரீக
நாகம் தீண்டி |
| நல்ல
தமிழ் சாகும்போதும், |
| நான்கு
வரி தமிழில் பேச சிலர் |
| நாக்கு
நுனி நோகும்போதும், |
| சினம்கொண்டு
சீறுகின்றாள் |
| செந்தீயாய்
செந்தமிழ்த்தாய்! |
|
| தரமான
தமிழ்ப் பெயர்கள் |
| தரணியிலே
நூறிருக்க |
| வரம்
வாங்கிப் பிள்ளை பெற்று |
| வடமொழியில்
பெயர் வைத்தால் |
| சீறாமல்
என்ன செய்வாள் |
| சினம்கொண்ட
செந்தமிழ்த்தாய்! |
|
| தமிழ்த்தேரே
இங்கு தள்ளாடும்போது |
| வடமொழித்தேரின்
வடம்பிடித்திழுத்தால் |
| "சீ"யெனச்
சீறுகிறாள் |
| சினம்
கொண்ட செந்தமிழ்த்தாய்! |
|
| "கொலைவெறி"யாய்
தமிழர் நாவில் |
| அலைமோதும்
ஆங்கிலத்தால் |
| தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளில் |
| தொலைந்துபோன
தமிழையெண்ணி |
| சிங்கமெனச்
சீறுகிறாள் |
| சினம்
கொண்ட செந்தமிழ்த்தாய்! |
|
| இளங்கோவும்,
பாரதியும் |
| இனிக்க
இனிக்க இறைத்த தமிழ் |
| இங்கிலாந்தின்
தாய்மொழியால் |
| இறங்குமுகம்
காணும்போது |
| சிலிர்த்தெழுந்து
சீறுகிறாள் |
| சினம்
கொண்ட செந்தமிழ்த்தாய்! |
|
| சிங்கள
நாட்டுச் சிறுமைகளும், |
| கேரள
நாட்டுக் கேவலமும் |
| தரணியெங்கும்
தமிழர்நெஞ்சில் |
| தணலாகத்
தகிக்கையிலே |
| தமிழ்த்தாயைக்
குளிர்விக்கத் |
| தற்சமயம்
ஏது நேரம்? |
|