| என் அன்னைக்கு அடுத்த அன்னை ! |
| கெஞ்சியும் கொஞ்சியும் , |
| ஆசையாய் அதட்டலாய் , |
| பாலுட்டி சோறூட்டி , |
| இருபதுவரை என் தாய் , |
| இறுதிவரை என் தாரம்! |
| என் தொப்புள் கொடி உறவுக்கு |
| தோள் கொடுக்க வந்த |
| தாலிக்கொடி உறவு ! |
| தாய் ,தந்தை , |
| அதற்கடுத்தபடியாய் மனிதரில் |
| பார்க்கும் மூன்றாவது தெய்வம் , |
| எனெக்கான நலம் நாடி , |
| அழுகையிலும் சிரிப்பிலும் ஒன்றான |
| என் இறுதி நண்பன் , |
| என் நலத்தோடு சேர்த்து , |
| என் குடும்பத்தாரை |
| உணவிட்டு அரவணைக்கும் |
| அடைகாக்கும் பறவை ! |
| என் சுக துக்கங்களின் |
| சுமைதாங்கி ! |
| இருட்டு உலகில் |
| எனக்கு வழிகாட்ட வந்த |
| ஒளி விளக்கு , |
| என் விந்து துளிகளை |
| விதையாக்கி |
| என் வம்சத்தை விருட்சமாக்கும் |
| புண்ணிய பூமி, |
| பிள்ளை வரத்தின் , |
| படைப்பாளி ! |
| என் முழுமையான |
| முந்தானை உலகம் , |
| இன்பத்திலான வீட்டு சிறை , |
| என் சுகம் , சோகங்களின் |
| பிறப்பிடம் , |
| அன்பில் அம்மா , |
| அறிவுரையில் அப்பா, |
| வெளிப்படையான விஷயங்களில் நண்பன் ! |
| என்னையும் என் உறவுகளையும் |
| நேசிக்கும் ஓர் உன்னத உறவு , |
| என் எதிர்கால திட்டங்களின் பயனாளி , |
| நாங்கள் சம்பாதித்து சேர்திடாத |
| குடும்ப பொக்கிஷம் , |
| எங்கள் குடும்ப குத்துவிளக்கு , |
| எங்கள் வீட்டில் கொலுசின் ஓசையில் |
| நடமாடும் தெய்வம் ! |
| என்னையும் தெய்வமாக்கிய ஒரே துணை , |
| என்னை எழுப்பும் காலைமணி , |
| விடியலில் நான் முகம் பார்க்கும் கண்ணாடி , |
| என் அதிர்ஷ்டங்களின் தேவதை , |
| என் அந்தரங்கத்தில் சரிபாதி ! |
| என் இளமை எதிர்பார்ப்பின் பரிசு , |
| என் இல்லத்தை ஆளவந்த அரசி , |
| கால கட்டளைகளில் அடங்காத நான் |
| அவள் காம கட்டளைகளில் அடங்கி இருக்கிறேன் ! |
| உலகமே சுகமாகும், , |
| மெத்தைகள் மீது வெறுப்புவரும் , |
| அவள் மடிசாய்ந்து , |
| தலைகோதி கன்னசரும் நேரத்தில் ! |
| கடமைகளில் எனக்கு இணையானவள் , |
| வெளிப் பொறுப்புகளை நான் பார்க்க , |
| வீட்டு பொறுப்பு அவள் கையில் , |
| என் வரவு செலவுகளில் மனம் நிறைந்த |
| மனையாள் ! |
| உறவுகளில் புதிரானவள் , |
| உணர்வுகளில் கடவுள் ஆனவள் , |
| உலகம் போற்றும் பென்மையானவள் , |
| மென்மையே குணமானவள் ! |
| அன்பே உருவானவள் , |
| அனைத்திலும் நிறைவானவள் , |
| என் கருத்தினில் கருவானவள் , |
| கனவிலும் நினைவிலும் |
| என் கடவுளானவள்! |
| என் மனைவி நிமிஷா ரமேஷ் !!!! |
Saturday, October 6, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment