Saturday, September 22, 2012

வர்ணித்தவன் 
எல்லாம் பெண்கள் உடம்பில் 
உள்ள வேதங்களை படிக்கிறான் 
இடம் பொருள் ஏவலை மறந்து 
இவளும் கிடக்கிறாள் 
பெண்ணின் கற்பின் 
அருமையை மறந்து ...! 
கண்ட 
இடங்களிலும் முத்தக் 
கண்காட்சி காணப்படுகிறது 
அமெரிக்காவை போல...! 
ஒரு சந்திப்பில் 
கைப்பிடித்தவன் 
ஓர் இரவு கணவன் ஆகிறான் ...! 
காணும் இடமெல்லாம் 
கல்லூரி தோட்டம் 
பூக்கும் மணமெல்லாம் 
காதலர்கள் கூட்டம் 
அவர்களுக்குள் நடக்கிறதே 
இளமை ஆட்டம் 
அதனுள் தீர்த்துக் கொண்டார்கள் 
இளமைப் பசியை... 
பேருந்தில் 
புயலாக உரசல் நடக்கிறது 
பூங்காக்களில் 
மழையாகவே பொழிகிறது 
முத்தங்கள் ...! 
துப்பட்டாவால் 
தன் முகத்தை மறைத்தவள் 
மார்பகத்தை துப்பட்டாவால் 
மறைக்க மறந்தாள் 
ரசித்துக் கொண்டார்கள் 
அவளை ஏற்றிச் சென்ற 
காதலனைத் தவிர 
அனைவரும் ...! 
அன்று 
காதல் பூத்ததே 
திருமணத்துக்காகத்தான் 
இன்று 
பெரும்பாலும் காதல் பூப்பதே 
கற்பை கறையாக்கத்தான்...! 
உரசிவிட்டு 
உடம்புக்காக உறங்கிவிட்டு 
போகும் காதலைத்தான் 
பார்க்க முடிகிறது 
உடம்பை 
எதிர்பார்க்காத 
உயிர்கொண்ட காதலை 
பார்க்க முடிவதில்லையே ...! 

No comments:

Post a Comment