Wednesday, September 26, 2012

என் தோழியே 
உனக்காக சில வரிகள் 
இதில் மறைந்திருக்கும் 
என் கண்ணீர் துளிகள் 
அவள், பெயர் ” ?” 
இந்த கதையின் நாயகி 
என் முதல் தோழி 
 தமிழ் பெண் 
பாரதி பாடிய புதுமைப்பெண் 
நியாபகம் உள்ளதா ! 
என் பெயர்ச் சொல்லி 
உன் அறிமுகம் 
முதன் முறை பார்த்தேன் 
?யின் முகம் 
நம் நட்பின் 
தொடக்கம் அறியேன் 
முடிவை மறவேன், உன்னால் 
நட்பென்னும் மழை 
நம் மீது பொழிந்தது 
அதில் நனைந்து 
ஒரு வருடம் கழிந்தது 
தொடங்கியது கல்லூரியின் 
இரண்டாம் ஆண்டு அன்று 
எங்கள் நட்பின் 
இறுதி நாள் என்று 
காணச் சென்றேன் 
பேச்சில் ஒரு மாற்றம் 
புன்னகையில் போலித் தோற்றம் 
என்னை, பார்க்க 
பார்வை இல்லை அவளிடம் 
முதல் தோழியின் நட்பு 
முடிந்து போனது 
முகவரி இன்றி 
தொலைந்து போனது 
கண்ணீர் நிரம்பி 
என் கண்கள் 
மறைக்க முயலும் 
என் கைகள் 
ஊர் பழித்ததென 
உறவை அறுத்தாய் 
ஏன் என்றதற்கு 
பதில்கூற மறுத்தாய் 
நான் கொல்லப்பட்டதின் 
வலி உணர்ந்தேன் 
உன்னை வார்த்தையால் 
கொல்லத் துணீந்தேன் 
என்னிடம் சொல்லாமல் சென்றாய், 
அது நீ செய்த ஒரே தவறு 
தீஞ்சொல்லால் கொன்றேன் உன்னை 
அது நான் செய்த பெருந்தவறு 
காலந்தாழ்ந்து என் 
தவறை உணர்ந்தேன் 
உன்னிடம் மன்னிப்புகோரும் 
அருகதை இழந்தேன் 
இன்று, 
உன் குரல் மட்டுமல்ல 
வள்ளுவன் குறளும் புரிந்தது 
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்; 
ஆறாதே நாவினால் சுட்ட வடு 
மன்னிப்பாயா என்னை..

No comments:

Post a Comment