| என் தோழியே |
| உனக்காக சில வரிகள் |
| இதில் மறைந்திருக்கும் |
| என் கண்ணீர் துளிகள் |
| அவள், பெயர் ” ?” |
| இந்த கதையின் நாயகி |
| என் முதல் தோழி |
| தமிழ் பெண் |
| பாரதி பாடிய புதுமைப்பெண் |
| நியாபகம் உள்ளதா ! |
| என் பெயர்ச் சொல்லி |
| உன் அறிமுகம் |
| முதன் முறை பார்த்தேன் |
| ?யின் முகம் |
| நம் நட்பின் |
| தொடக்கம் அறியேன் |
| முடிவை மறவேன், உன்னால் |
| நட்பென்னும் மழை |
| நம் மீது பொழிந்தது |
| அதில் நனைந்து |
| ஒரு வருடம் கழிந்தது |
| தொடங்கியது கல்லூரியின் |
| இரண்டாம் ஆண்டு அன்று |
| எங்கள் நட்பின் |
| இறுதி நாள் என்று |
| காணச் சென்றேன் |
| பேச்சில் ஒரு மாற்றம் |
| புன்னகையில் போலித் தோற்றம் |
| என்னை, பார்க்க |
| பார்வை இல்லை அவளிடம் |
| முதல் தோழியின் நட்பு |
| முடிந்து போனது |
| முகவரி இன்றி |
| தொலைந்து போனது |
| கண்ணீர் நிரம்பி |
| என் கண்கள் |
| மறைக்க முயலும் |
| என் கைகள் |
| ஊர் பழித்ததென |
| உறவை அறுத்தாய் |
| ஏன் என்றதற்கு |
| பதில்கூற மறுத்தாய் |
| நான் கொல்லப்பட்டதின் |
| வலி உணர்ந்தேன் |
| உன்னை வார்த்தையால் |
| கொல்லத் துணீந்தேன் |
| என்னிடம் சொல்லாமல் சென்றாய், |
| அது நீ செய்த ஒரே தவறு |
| தீஞ்சொல்லால் கொன்றேன் உன்னை |
| அது நான் செய்த பெருந்தவறு |
| காலந்தாழ்ந்து என் |
| தவறை உணர்ந்தேன் |
| உன்னிடம் மன்னிப்புகோரும் |
| அருகதை இழந்தேன் |
| இன்று, |
| உன் குரல் மட்டுமல்ல |
| வள்ளுவன் குறளும் புரிந்தது |
| தீயினால் சுட்ட புண் உள் ஆறும்; |
| ஆறாதே நாவினால் சுட்ட வடு |
| மன்னிப்பாயா என்னை.. |
Wednesday, September 26, 2012
Saturday, September 22, 2012
| மடியில் சுமந்து பாலூட்டியவளை |
| "மம்மி" என்றழைக்கும்போதும், |
| தமிழ்நாட்டுத் தகப்பனை |
| "டாடி" என்றழைக்கும்போதும், |
| செவிபொத்தி அழுகின்றாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| நாகரீக நாகம் தீண்டி |
| நல்ல தமிழ் சாகும்போதும், |
| நான்கு வரி தமிழில் பேச சிலர் |
| நாக்கு நுனி நோகும்போதும், |
| சினம்கொண்டு சீறுகின்றாள் |
| செந்தீயாய் செந்தமிழ்த்தாய்! |
| தரமான தமிழ்ப் பெயர்கள் |
| தரணியிலே நூறிருக்க |
| வரம் வாங்கிப் பிள்ளை பெற்று |
| வடமொழியில் பெயர் வைத்தால் |
| சீறாமல் என்ன செய்வாள் |
| சினம்கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| தமிழ்த்தேரே இங்கு தள்ளாடும்போது |
| வடமொழித்தேரின் வடம்பிடித்திழுத்தால் |
| "சீ"யெனச் சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| "கொலைவெறி"யாய் தமிழர் நாவில் |
| அலைமோதும் ஆங்கிலத்தால் |
| தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் |
| தொலைந்துபோன தமிழையெண்ணி |
| சிங்கமெனச் சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| இளங்கோவும், பாரதியும் |
| இனிக்க இனிக்க இறைத்த தமிழ் |
| இங்கிலாந்தின் தாய்மொழியால் |
| இறங்குமுகம் காணும்போது |
| சிலிர்த்தெழுந்து சீறுகிறாள் |
| சினம் கொண்ட செந்தமிழ்த்தாய்! |
| சிங்கள நாட்டுச் சிறுமைகளும், |
| கேரள நாட்டுக் கேவலமும் |
| தரணியெங்கும் தமிழர்நெஞ்சில் |
| தணலாகத் தகிக்கையிலே |
| தமிழ்த்தாயைக் குளிர்விக்கத் |
| தற்சமயம் ஏது நேரம்? |
| வர்ணித்தவன் |
| எல்லாம் பெண்கள் உடம்பில் |
| உள்ள வேதங்களை படிக்கிறான் |
| இடம் பொருள் ஏவலை மறந்து |
| இவளும் கிடக்கிறாள் |
| பெண்ணின் கற்பின் |
| அருமையை மறந்து ...! |
| கண்ட |
| இடங்களிலும் முத்தக் |
| கண்காட்சி காணப்படுகிறது |
| அமெரிக்காவை போல...! |
| ஒரு சந்திப்பில் |
| கைப்பிடித்தவன் |
| ஓர் இரவு கணவன் ஆகிறான் ...! |
| காணும் இடமெல்லாம் |
| கல்லூரி தோட்டம் |
| பூக்கும் மணமெல்லாம் |
| காதலர்கள் கூட்டம் |
| அவர்களுக்குள் நடக்கிறதே |
| இளமை ஆட்டம் |
| அதனுள் தீர்த்துக் கொண்டார்கள் |
| இளமைப் பசியை... |
| பேருந்தில் |
| புயலாக உரசல் நடக்கிறது |
| பூங்காக்களில் |
| மழையாகவே பொழிகிறது |
| முத்தங்கள் ...! |
| துப்பட்டாவால் |
| தன் முகத்தை மறைத்தவள் |
| மார்பகத்தை துப்பட்டாவால் |
| மறைக்க மறந்தாள் |
| ரசித்துக் கொண்டார்கள் |
| அவளை ஏற்றிச் சென்ற |
| காதலனைத் தவிர |
| அனைவரும் ...! |
| அன்று |
| காதல் பூத்ததே |
| திருமணத்துக்காகத்தான் |
| இன்று |
| பெரும்பாலும் காதல் பூப்பதே |
| கற்பை கறையாக்கத்தான்...! |
| உரசிவிட்டு |
| உடம்புக்காக உறங்கிவிட்டு |
| போகும் காதலைத்தான் |
| பார்க்க முடிகிறது |
| உடம்பை |
| எதிர்பார்க்காத |
| உயிர்கொண்ட காதலை |
| பார்க்க முடிவதில்லையே ...! |
Monday, September 10, 2012
| உன் இதழ் சொட்டும் தேனை |
| பருகி ஊன் வளர்த்து உயிர் |
| வாழ்வேன் உயிர்முச்சு நிற்கும்வரை |
| நீ வெளிவிடும் மூச்சுக்காற்றும் |
| என் சுவாசகாற்றானது நீ சுவாசித்ததால்... |
| அனைத்து பிராணங்களும் தவமிருக்கும் |
| உன் மூச்சு காற்றை சுவாசிக்க |
| நீ எடுத்து வைக்கும் ஒரு அடிக்கு அந்த |
| அமைதியே அடிமையாகிவிடும் |
| இந்த உலகமே இருண்டுவிடும் |
| அன்பே !உன் இமை மூடும் நேரத்தில் |
| தேவர் கூட்டம் தரையிறங்கியது |
| தவபுதல்வியை தவறவிட்டோம் என்று |
| கார் மேகம் எல்லாம் ஒன்றானது |
| அன்பே !உன் அடர் கருகூந்தலை காண |
| உன் சுட்டும் விழி பார்வையால் |
| அந்த சுடர்வனே சுருங்கிவிடுவான் |
| வான் நிலா வடம் பிடித்திறங்கியது |
| அன்பே !உன் அழகு நெற்றியில் குடியிருக்க |
| வான்மீன்கள் அனைத்தும் உன் |
| வாய்க்குள் வந்துவிட்டது |
| பக்கத்திற்கு பதினாறு பற்களாக |
| அனைத்து மலர்களும் ஆடையானது |
| அழகி! நீ அணிவாய் என்று |
| வானவில்லின் ஏழு நிறங்களும் |
| வளவியாகிவிட்டது |
| அன்பே !உன் கரம் சேர |
| தவப்புதல்வன் நானும் |
| தவித்து தவமிருக்கிறேன் |
| தங்கமகள் ( நிமிஷா )உன் இதயம் |
| எனும் கோட்டைக்குள் குடியிருக்க !!!!!!! |
Wednesday, September 5, 2012
பெண்ணே நீ தூரத்தில் இருந்தாலும்,
என்னைத் தொட்டுச் செல்லும்
தென்றலாக இருக்கின்றாய்!
என் ஆசைகளுக்கு அணை கட்டுகிறேன்.....
உன் சிரிப்பொலியில் சுக்குநூறாக உடைக்கின்றாய்.....!
என் உதடுகள் உன்னிடம் பேசுதடி.....
என் உள்ளம் ஏனோ நடுங்குதடி......
உள்காச்சலும் அடிக்குதடி......!
சிரிக்காதே பெண்ணே.....
என் சிறுமூளையும் சிதருதடி.......
என் சின்ன இதயத்துக்கும் சிறகுகள் முளைக்குதடி..
தென்றலாய் வரும் பெண்ணே....
உன்னை உணர்ந்திருக்கின்றேன்,
உன்னை நுகர்ந்ததில்லையடி........!
இதழ் பூக்கும் பெண்ணே.......
உன்னில் என் இதழ் குவியுதடி.....
இம்சைகள் ஆகுதடி........
புன்னகைப் பெண்ணே........
உன் வெட்கச் சிரிப்பில்,
என் புலன்களில் அலையடிக்குதடி......
மொத்தத்தில் பெண்ணே.......
உன் பிரியமான சிரிப்பால்,
நான் உன் பித்தன் ஆனேனடி..............!!!!!!!
காதலை மறுக்கும் காதலியாய் நீ..
அதையும் ரசிக்கும் காதலனாய் நான்..
குறைந்த நபர்களே கொண்ட
பேருந்து பயணம் ..
முன் இருக்கையில் நீ..
பின் இருக்கையில் நான்..
இருக்கையின் கம்பிக்கு இடையில்
முழு முகத்தையும் மறைத்துக்கொண்டு
கண்களை மட்டும் காட்டி பேசும்
உந்தன் அழகில் ஒரு சதவிதமாவது
வருமா .?மேகத்தில் மறைந்து நிற்கும்
நிலா..!!!!
நீ... நடந்து வருகையில் ,நிச்சயம்
தோற்றுத்தான் போகும் துள்ளி
குதித்து வரும் மான் குட்டியின்
அழகு...!!!!
மழையில் நனைய பிடிக்கும் என்று சொன்னாய்
மழையில் நனைய நீ ஆசைபடுவதைவிட
உன்மேல் விழ அவைகள் அசைபடுவதே
அதிகம்..!!!
ஒவ்வொரு மழைத்துளியும் உன்மேல் விழ
அவை அனைத்தும் தெரிகிறது
எனக்கு " துண்டு பிரசுரமாகவே "
அதில் பொறிக்கப்பட்ட வாசகமாய்
என்னை காதலிப்பாய...? இப்படிக்கு
மழை...!!!
சலைக்காமல்,மலைக்காமல் அலைபாயும்
கடல் அலைக்கு போட்டியென காற்றிலே
அசைந்தாடும் கூந்தலை பிடித்து
காதுக்கு பின்னே புதைத்துகொள்ளும்
உந்தன் அழகை ரசிக்க இந்த
ஒரு யுகம் போதாதுதான்.!!!
அன்றொரு நாள்..! அழகிய மாலைபொழுது
காலை முதல் உனக்காக ஒழித்து
வைத்திருந்த தென்றலை வீசிக்கொண்டிருந்தது
காற்று..!!!
அந்த நொடிக்கணம் சட்டென
எதிர்பாராமல் என் முகத்தை
உன் துப்பட்ட தழுவி செல்ல
அடடா...!!!!
ஒற்றை நொடியில் ஓராயிரம் வார்த்தைகள்
பேசிவிட்டு சென்றது என்னிடம்..!!
துப்பட்டாவை கண்டு பிடித்தவனுக்கு
நிச்சையம் கவிஞர்கள்- வாழ்த்துக்கள்
உண்டு எப்போதும்..!!!
கழுத்தில் தவழும் தங்க சங்கிலியை
எடுத்து,,செவ்விதழ்களால் கவ்வி
முத்து பற்களால் மெல்ல நீ கடிக்க
சட்டென உயிர்த்தெழும் சங்கிலி
இன்பமாய் உன் இதழ்களை
சுவைத்து மகிழ்வதை
நான் அறிவேன்..!!!!
ம்ம்.. கொடுத்துவைத்த சங்கிலி
ஒற்றை தலைவலிக்காக எப்போதாவது
நீ அணிந்து கொள்ளும் உன்
மூக்கு கண்ணாடி..!!
அந்த நொடி கணங்களில் அந்த
கண்ணாடி உன் கண்களை பார்த்து
இத்துனை நாள் உன்னை காணாமல்
நொறுங்காமல்.. நொறுங்கி போனேனே,,
என பேசிக்கொள்ள கூடுமோ..!!!
உன் இதழ் விரியும் எருக்கம் பூ
வெடிக்கும் சிரிப்பு..,
அமைதியான ஆற்றில் தங்க
சங்கிலி கட்டிவிட்டது போலல்லவா
தோணுதடி எனக்கு..!!!
நம் பல்கலைகழகத்து முற்றத்து
பிள்ளையாருக்கு தினசரி தவறாமல்
கிடைத்து விடுமே உந்தன் தரிசனம்
அதை எனக்கும் கிடைக்கபெற
செய்வாயோ..!!!
தோழியாய் அறிமுகம் ஆனவள் நீ
முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது
எனக்கு காதல் நோய்..
இருந்தும் சொல்லமுடியாமல் போன
பல தருணங்கள்..!!!!
எதிர்பாராமல்,எதார்த்தமாய்
என்னை அறியாமல் நான் செய்த
சில செயல்களால் அறிந்து
கொண்டாயோ என்னவோ..?
எப்போதும் இயல்பாய் பேசும் நீ..
என் காதல் தெரிந்ததில் இருந்து
கதிரவனை கண்டது அதன்
திசையிலேயே செல்லும் சூரியகாந்தி
மலருக்கு எதிர் மறையானதோ..?
என் முகம் கண்டதும் எதிர்
திசையில் திரும்பி கொள்கிறதே
இப்போதெல்லாம் உந்தன் முகம்..
உன்னை பார்க்கும் போதெல்லாம்
பசியைக் கூட சொல்ல தெரியாமல்
கதறி அழும் பச்சிளம் பிள்ளை போல்
மாறுகிறேன் என் காதலை
சொல்ல தெரியாமல்..!!!
இப்படி உன்னை அடிமுதல் நுனிவரை
அணு அணுவாய் ரசிக்கும் எனக்கு
கிடைக்கும் பரிசுகளோ சோகம்
மட்டுமே தொடர்ச்சியாய்..!!
என் காதல் உனக்கு தெரிந்துவிட்டது
என்ற ஒற்றை சந்தோஷம் மட்டுமே
என்னிடம்..!!
சோக சுரங்கள் கேட்கும்போதெல்லாம்
அறுபடுகிறது எந்தன் இதயம்
அறுபட்ட இதயம் என்றாலும்
உன் நினைவுகள் மட்டும் அப்படியே
பத்திரமாய்..!!!
உனக்கு கொடுப்பதற்காக
மனமுறுகி நான் எழுதும் கவிதைகளை
வழக்கம்போல் வைத்துக்கொள்கிறேன் நானே..!
கசக்கியபடி...!!!!!
ரசிக்க தெரிந்தவனுக்கு காதல்
முழுமதியின் முகம் பார்க்க
ஆதவன் அடங்கும் நேரம்
காலையில் பள்ளிக்குச் சென்ற
பிள்ளைகளின் வருகையை எண்ணி
அன்னை வாயிலில் காத்திருக்கும்
அழகு தருணம் ...
கணவனின் வருகையை எண்ணி ,
கனவு காணும் மனைவி
ஆயிரம் முறை பார்த்தாலும்
காதலன் கல்லூரி முடிந்து காத்திருக்கும்
காதலியின் மனதிற்கு வருகை தந்து
இன்பமூட்டும் இனிய தருணம்
அலுவலகம் சென்ற அப்பா
அரும்புகளுக்கு ஆசைபொருளை
வாங்கி வரும் அழகு தருணம்
ஆயிரம் கவலைகளோடு
களைபுற்றிருந்தாலும் மனதை
இறகாக்கும் இனிய பொழுது
கவலைகளோடு ஆர்ப்பரிக்கும்
காலைபொழுதை அடக்கி
அமைதியாக்கும் அந்தி மாலைபொழுது ...
கவலைகளோடு விழித்த கண்ணை
கவலையுற்று உறங்க வைக்கும்
இரவை இனிதே வரவேற்கும்
இனிய தருணம்
Tuesday, September 4, 2012
| கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... |
| காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்... |
| நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே... |
| எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு... |
| கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு.. |
| பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. |
| புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்... |
| நீ விதைத்ததை நீயே அறுவடை செய்வாய்; |
| அன்று கொள்ளாவிடினும் நின்றாவது கொள்ளும்.. |
| மாற்றான் துயரம் மற்றுமல்ல; மதுவும்; ஏன் மாதுவும் கூட... |
| மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே, |
| அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்.... |
| இது "நீ".. |
| உனக்கென ஒரு பாதை.. |
| உனக்கென ஒரு பயணம்.. |
| உன்னோடு சில பயணிகள்.. |
| தேர்வு உன் கையில்... |
| இது நீ "பிறந்த நாள்" அல்ல.. |
| உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்... |
| உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன் |
| பல்லாண்டு காலம் வாழ்க... |
| பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. |
Subscribe to:
Comments (Atom)


.jpg)




